ஆலோசகர்கள் குழு

முதலீட்டு ஆலோசகர்களின் முழுமம்

நிஷ் சாவ்லா

நிர்வாக இயக்குநர்

திரு. சாவ்லா ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் இயக்குதல் மற்றும் முதலீடு செய்தல் அனுபவத்தைக் கொண்டுள்ளார், மேலும் இவர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல்வேறு நிறுவனங்களில் பிரசுரித்தல், ஒளிபரப்புதல், ஆன்லைன் ஊடகம் மற்றும் கேளிக்கை துறைப் பகுதிகளை மூத்த நிலையில் வழிநடத்தியுள்ளார்

மேடிசன் இந்தியா கேப்பிட்டலில் இணைவதற்கு முன்னர், திரு. சாவ்லா, இந்தியாவின் ஓர் முன்னணி ஊடக நிறுவனமான ரெடிஃப் ஹோல்டிங்க்ஸில், அமெரிக்க ஊடக இயக்கங்களின் தலைவராக இருந்தார். ரெடிஃப்பிற்கு முன்பு திரு. சாவ்லா ரேடியோ டுடேயின் சிஓஓவாக இருந்தார், அங்கே அவர் இந்தியாவின் மூன்று முன்னணி வானொலிகளை நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை நிர்வாகம் செய்தார். ரேடியோ டுடேவிற்கு முன்னர், திரு. சாவ்லா ஈஎஸ்பிஎன் இந்தியாவை வெற்றிகரமாக நிறுவிய இந்தியாவின் முன்னணி கேபிள் பிணைய நிறுவனமான மோடி என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் இயக்கங்களையும் நிர்வகித்திருக்கின்றார். இவர் ட்யூக் பல்கலைக்கழகத்தின், ஃபுக்யூவா வர்த்தகப் பள்ளியிலிருந்து எம்.பி.ஏ பட்டத்தையும், டெல்லிப் பல்கலைக்கழத்திலிருந்து ஓர் முதுநிலை வர்த்தகப் பொருளாதாரவியல் பட்டத்தையும், ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி, புது டெல்லியிலிருந்து ஓர் பி.ஏ பட்டத்தை நன்மதிப்போடும் பெற்றிருக்கின்றார்.

Advisory Team

முன்னோட்டம்

மேடிசன் இந்தியா கேப்பிட்டல் குழுவானது தனது போர்ட்ஃபோலியோ நிறுவனங்களுக்காக மிகச்சிறந்த விளைவுகளை உண்டாக்க ஒன்றிணைந்து உழைக்கின்றது.எங்களது குழுவின் மூத்த தலைவர்கள் எங்கள் துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டிருப்பது அல்லது இயக்கிக் கொண்டிருப்பது ஒவ்வொன்றிலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக பல பொருளாதார சுழற்சிகள் மற்றும் தத்ரூபமான தொழில் மாற்றங்கள் ஏற்படும் போது நிகழும் நிகழ்வுகளைக் கவனித்து வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு பத்தாண்டுகளாக நாங்கள் பெற்ற முதலீட்டு தொலைநோக்குப் பார்வை,ஆழமான ஞானம், உறவுகள் மற்றும் வேறுபட்ட அனுபங்கள் ஆகியவை எங்களது போர்ட்ஃபோலியோ நிறுவனங்கள் நாங்கள் கவனம் செலுத்தும் தொழில்களில் வெற்றியடைய உதவுவதற்குசாத்தியப்படுத்துகின்றன.