எங்களைப் பற்றி

நாங்கள் யார்

எமது வழிகாட்டல் கொள்கைகள்

எங்களது தொழில் முறை மற்றும் தனிப்பட்ட நடத்தையானது நாங்கள் யார் என்பதையும் எங்களது கலாச்சாரத்தின் வலிமையையும் வரையறுக்கும் வகையில் அமைக்கப்பட்ட கொள்கைகளால் வழிநடத்தப்படுகின்றது. இந்த நீடித்த தரங்கள் மேடிசன் இந்தியா கேப்பிட்டலின் அடிப்படையாக அதன் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகின்றன, மேலும் இவை நாங்கள் ஒவ்வொரு தினமும் செய்யும் செயல்களை வழிநடத்த உதவுகின்றன.

  • நேர்மை மற்றும் தொழில் சார்ந்த மனப்பான்மை, இவைதான் முதல் முக்கியமானவை. வாய்மை, கண்ணியம் மற்றும் தொழில் சார்ந்த மனப்பான்மை இவைகளை விட உயர்ந்த நன்னடத்தை மதிப்புகள் ஏதுமில்லை.
  • தனிப்பட்ட சிறந்த நபர்கள் வாயிலான குழு வேலை. எப்போதும் எங்களிடமிருந்து சிறந்ததையே குழுவிற்கு அளிப்போம், மேலும் வெற்றிக்காக உழைப்போம்.
  • உயர்ந்த தரமான வேலை மற்றும் சிந்தனைகள் நாங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் உள்ளன. தரம் மற்றும் மேம்பாட்டிற்கான ஓர் நிர்ப்பந்தப்படுத்தும் கடமை.
  • கடமை மற்றும் பொறுப்பு. நம்பிக்கையுடன் வேலை செய்து செயல்கள் மற்றும் முடிவுகளுகாகத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
  • படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு. சிறந்த தீர்வுகளுக்காகவும் பிறர் தவறவிட்ட வாய்ப்புகளைத் தேடுவதர்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
  • எங்களது அணுகுமுறையில் அடக்கமும், எங்கள் வாடிக்கையாளர்கள், தொழில் தொடர்பாளர்கள், சக ஊழியர்கள் மற்றும் எங்கள் சமூகம் ஆகியவற்றின் மீது மரியாதையும் வழங்குவோம். ஒவ்வொருவரையும் கௌரவமாகவும் மரியாதையாகவும் நடத்துவோம்.
  • நாங்களே மகிழ்வோம். எங்களது குடும்பம், எங்களது வேலை மற்றும் எங்கள் சமூகம் ஆகியவற்றைப் பற்றி நாங்கள் அன்பு நிறைந்தவர்களாக இருப்போம்.