சட்டம்

சட்டரீதியான மற்றும் அந்தரங்கக் கொள்கை

மேடிசன் இந்தியா கேப்பிட்டல் இணையதளத்தைப் பார்வையிட்டமைக்கு தங்களுக்கு நன்றி. இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக ஒத்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், தயவு செய்து இந்த இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டாம். மேடிசன் இந்தியா கேப்பிட்டலானது இந்த அந்தரங்கக் கொள்கையையும் பயனர் ஒப்பந்தத்தையும் எங்கள் இணையதளத்திற்கு ஏற்பட்ட ஏதேனும் மாற்றங்கள் மற்றும் அதன்மீது எங்கள் பயனர்களின் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்வப்போது மாற்றலாம்.


அந்தரங்கக் கொள்கை

மேடிசன் இந்தியா கேப்பிட்டல் இந்த இணையதளத்தின் பார்வையாளர்களின் அந்தரங்கத்திற்கு மதிப்பளிக்கின்றது. இந்த கொள்கையானது பார்வையாளர்களிடமிருந்து எப்படி மற்றும் எப்போது நாம் தகவலகளைப் பெறுகின்றோம் என்பதை விவரிக்கின்றது

மதிப்பீட்டு தரவு
பொதுவாக நாங்கள் பார்வையாளரின் எண்ணிக்கை மற்றும் அடுத்தடுத்த வருகை போன்ற குறிப்பிட்ட பயன்பாட்டுத் தகவல்களைப் பதிவு செய்வோம். நாங்கள் அதைப்போன்ற தரவுகளை அனைவரிடமும் பயன்படுத்தினால், அது ஓர் மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்கும், மேலும் உங்களைத் தனிப்பட்ட முரையில் அடையாளப்படுத்த உதவும் எந்தத் தகவலையும் நாங்கள் மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்துவதில்லை. நாங்கள் குக்கீஸ்களைப் பயன்படுத்துவதில்லை.

நீங்களாகவே முன்வந்து உங்களைப்பற்றிய தகவலை எங்கள் இணையதளத்தில் சமர்ப்பித்தால், உதாரணமாக ஓர் பொதுத் தகவலுக்கான வேண்டுகோள் அனுப்புதல் அல்லது ஓர் வர்த்தக திட்டத்தினை சமர்ப்பித்தல் மூலம், நாங்கள் உங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்ஞ்சஞ்சல் முகவரி போன்ற ஏதேனும் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் தகவல்களை நாங்கள் பதிவு செய்து நியாயமான வர்த்தக நோக்கங்கள் உள்ளிட்ட ஆனால் உங்கள் தேவையை நிறைவேற்றுதலை வரையறுக்காத வகையில் பயன்படுத்துவோம். நாங்கள் உங்களின் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் தகவல்களை உங்கள் அனுமதியின்றி வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்து்தில்லை.

பயனர் உடன்படிக்கை

பயன்படுத்துவதில் கட்டுப்படுகள்
இந்த இணையதளத்தைப் பார்வையிடும் எந்த ஒரு நபரும் தனிப்பட்ட இணையப் பக்கங்களை வணிகமல்லாத நோக்கங்களுக்காக நகல் மற்றும் அச்செடுக்க அனுமதிக்கப்படுகின்றார், இந்த நகல்கள் சட்டப்பூர்வமான அறிக்கைகள் உள்ளடங்கிய அசலான இணையதள உள்ளடக்கத்தை கண்டிப்பாக மாற்றக் கூடாது. (i) இந்த இணையதளத்தின் பொருட்கள் ஏதேனும் வணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்டால், (ii) இணையதள பொருட்களை குறைந்த அளவிற்கு மேல் நகலெடுத்தல் (iii) எங்கள் இணையதளத்தின் அதிக பகுதிகளை நகலெடுத்தல் போன்றவற்றிற்கு எங்களது முன் அனுமதி கண்டிப்பாகத் தேவை. நீங்கள் எங்கள் இணையதளத்தின் இதைப் போன்ற பயன்பாட்டிற்கு அனுமதி கோரினால், தயவு செய்து எங்களை என்ற info@madison-india.com மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

இணைத்தல்
இந்த இணைய தளத்திற்கு இணைக்கப் பட்ட அல்லது இணைக்கும் எந்த ஒரு இணையதளத்தின் உள்ளடக்கத்திற்கும் மேடிசன் இந்தியா கேப்பிடடல் பொறுப்பல்ல. எந்த ஒரு ஆஃப் தள பக்கங்கள் அல்லது பிற இணைய தளங்களின் உங்களது இணைப்பின் இழப்புப் பொறுப்பு உங்களையே சாரும்.

உரிமைத் தன்மை
வரைகலை, சின்னங்கள், கட்டுரைகள் மற்றும் பிற பொருட்கள் போன்கிந்த இணையதளத்தின் அனைத்து உள்ளடக்கங்களும் எங்கள் அமைபு அல்லது பிறவற்றின் சொத்து ஆகும், மேலும் இது பதிப்புரிமை மற்றும் பிற சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றது. இந்த இணையதளத்தில் காண்பிக்கப்படும் அனைத்து வணிகமுத்திரைகள் மற்றும் சின்னங்கள் ஆகியவை எங்கள் அமைப்போடு இணைக்கப் பெற்ற அல்லது இணைக்கப் பெறாத, அவற்றின் முறையான உரிமையாளர்களின் சொத்து ஆகும்

கடந்த செயல்திறன்
கடந்த செயல்திறன் எதிர்கால விளைவுகளை சுட்டிக்காட்டாது. எந்த ஒரு முதலீடும் அதைப்போன்ற கடந்தகால முதலீட்டினைப் போன்று இலாபத்தையோ அல்லது நட்டத்தையோ அடையும் என்று எந்த பிரதிநிதித்துவமும் அமைக்கப்படவில்லை

சர்வதேசப் பயன்
இணையத்தின் இயல்பின் காரணமாக இந்த இணையதளம் உலகளாவிய பயனர்களால் அணுகப்படலாம். இந்த இணையதளத்தை அணுகுவது அல்லது பயன்படுத்துவது, உங்கள் தேசத்தின் பகுதியில் சட்ட விரோதமாகக் கருதப்பட்டோ அல்லது தடைசெய்யப்பட்டோ இருந்தால், நீங்கள் அதைச் செய்யக் கூடாது. மேடிசன் இந்தியா கேப்பிட்டலின் வர்த்தகப் பகுதிகள் அல்லா பகுதியில் இந்த இணையதளத்தை அணுகத் தேர்வு செய்பவர்கள், தமது சொந்த முயற்சியில் அவ்வாறு செய்ய முயன்றால், அவர்கள் அனைத்து உள்ளூர் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளோடு ஒத்துப் போகின்றார்கள்

பொறுப்பின் வரம்புகள்
ஏதேனும் சேதங்கள் அல்லது ஏதேனும் செயல்திறன் இழப்பால் ஏற்படும் காயங்கள், தவறு, வெட்டுதல், குறுக்கீடு செய்தல், குறைபாடு, இயங்குதலில் தாமதம், கணினி வைரஸ், வரி தோல்வி, அல்லது பிற கணினிச் செயலிழப்பு ஆகியவற்றை உள்ளிட்ட உங்களது இந்த இணையதளப்பயன்பாட்டினால் (அல்லது பயன்படுத்த இயலாமையால்) விளையும் சிறப்பு அல்லது அதைத் தொடர்ந்த எந்த வித சேதங்களுக்கோ அல்லது காயத்திற்கோ நாங்கள் பொறுப்பல்ல, இந்த இணையதளத்தின் உள்ளடக்கங்களை நாங்கள் உள்ளது உள்ளபடியே எந்தவிதமான எந்த உத்தரவாதமும் இல்லாமல் வழங்குகின்றோம் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்கள். இந்த இணையதளத்தின் உங்களது பயன்பாடு மற்றும் எந்த ஒரு பொருளின் மீதான பயன்பாடு அல்லது நம்பிக்கையானது ஆகியவற்றால் ஏற்படும் இழப்புப் பொறுப்பு உங்களையே சாரும்.

தொடர்புக்கு

எமது இணையதளத்தைப் பார்வையிட்டமைக்கு நன்றி. எமது இணையதளத்தைக் குறித்தோ அல்லது எமது கமுக்கக் கொள்கை மற்றும் பயனர் உடன்படிக்கை குறித்தோ ஏதேனும் கேள்விகள், ஐயங்கள் இருந்தால் info@madison-india.com. என்ற மின்னஞ்சலில் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.